Categories
Tamil

கவிதைகள்: நட்பு கவிதை, காதல் கவிதை, பிரிவு கவிதை, வாழ்க்கை கவிதை

“வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகமாக வரவில்லை என்றால்
பல விஷயங்கள் கடைசி வரை தெரியாமல் போய்விடும் “

விட்டு பிடிப்பது நட்பல்ல
விட்டு கொடுப்பது நட்பு…!
விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல,
கடைசி வரை விட்டு விலகாமல்
இருப்பது தான் உண்மையான நட்பு!!!

உன்னை மறந்த இதயத்தை நினைத்து கொண்டு,
உன்னை உண்மையாக நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே…!

உணர முடியாத சந்தோஷத்தை கொடுப்பதும்..!
உணர முடியாத வலியை கொடுப்பதும்..!
உங்கள் மனதிற்க்கு பிடித்தவர் மட்டும் தான்…

மழைக்கு அழுவ தெரியும்,
ஆனால் சிரிக்க தெரியாது!
சூரியனுக்கு எரிக்க தெரியும்,
ஆனால் அணைக்க தெரியாது!
எனக்கு உன்னை நினைக்க தெரியும்,
ஆனால் மறக்க தெரியாது!

மழையின் முடிவு மண்ணில்!
நதியின் முடிவு கடலில்!
காற்றின் முடிவு?
அதுவே நம் காதல்!

காலம் காத்திருப்பது இல்லை! ஆனால்,
நம்மை நேசிக்கும் உண்மையான இதயம்
நமக்காக நிச்சயம் காத்திருக்கும்..!

உன் இதயத்தை நோக்கி சூரியனாய்
நீ இருந்தாலும், பூமியாக உன்னை சுற்றி வருவேன்
நீ என்னை சுட்டு எரிக்கும் வரை.

மன்னிக்க மட்டும் கற்றுக்கொள்
ஏன் என்றால் நம்மை ஏமாற்றியவர்களை
ஒரு நேரத்தில் நாம் நேசித்திருப்போம்…

“சரித்திரம் ஒரு முறை உன் பேரை சொல்ல வேண்டும் என்றால்
நீ பல முறை என்னிடம் வர வேண்டும்”

இப்படிக்கு “முயற்சி”.

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்..
ஆனால் தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம் நல்ல “நண்பர்கள்”.

அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அன்பு,
அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது நட்பு!

நட்பை உயிராக நேசிப்பதை விட,
உண்மையாக நேசித்து பார்,
நீ உயிர் விடும் வரை நட்பு உன்னை விடாது.

உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
என் நட்பின் சுவாசம் நீ!

நட்பு என்பது கண்களையும் கைவிரல்களையும் போன்றது.
கை விரலில் காயம் பட்டால் கண்கள் அழுகிறது,
கண்கள் அழுதால் கை விரல்கள் துடைக்கிறது.

பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்க்காக அல்ல…!!
அவர்களை அதிகமாக நினைப்பதற்கு…!!

உனக்குள் என் நினைவும்,
எனக்குள் உன் நினைவும்,
இருக்கும் வரை
நமக்குள் பிரிவு என்பதே இல்லை.

“காலங்கள் கடந்து போகும் நேரத்தில்
நான் கண்ணீரோடு திரும்பி பார்க்கிறேன்
நாம் பழகிய நாட்கள் மீண்டும் வருமா என்று”.

நிஜங்களை விட நினைவுகள் தான் இனிமையானவை..
ஏன் என்றால், நிஜம் என்பது சில நிமிடம் தான்
ஆனால், நினைவுகள் என்றும் நிரந்தரம்.

மலரே உன் மீது இருக்கும் துளிகள் பனித்துளி என்று நினைக்காதே!
நீ வாடாமல் இருக்க நான் சிந்திய கண்ணீர் துளிகள்.

இப்படிக்கு மேகம்.

நாம் தேடி தேடி நேசித்த ஒருவரை
ஒரு நாள் வெறுக்கலாம்…!
ஆனால்,
நம்மை தேடி தேடி நேசித்தவரை
ஒருநாளும் மறக்க முடியாது…

நீ நேசிக்கும் பலர்…
உன்னை மறக்க நினைத்தாலும்
உன்னை நேசிக்கும் சிலரை…
நீ நினைக்க மறக்காதே.

யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதை விட…
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்…

ஒரு உறவால் உனக்கு சந்தோஷம் வரும் என்றால்…!
கண்டிப்பாக ஒரு நாள் கண்ணீரும் வரும்…!

வாழ்வறிந்து செலவு செய்தால் வாழ்க்கை மலரும்
வரவை மீறி செலவு செய்தால் வாழ்க்கை கருகும்.

ஆசைகள் இல்லாத வாழ்க்கையை எப்போது தேடி செல்கிறாயோ
அப்போது “துன்பம்” இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும்.

“எதுவும் புரியாத போது வாழக்கை தொடங்குகிறது
எல்லாம் புரியும் போது வாழ்க்கை முடிகிறது!”

“பிரிந்து இருந்து பிரியம் காட்ட வேண்டாம்”…!
“நீ அருகில் இருந்து சண்டை போடு போதும்”,
அது தான் காதலின் ஆழம்.

சிறகுகள் இல்லாத பறவையின் வாழ்க்கையும்…!
நட்பு இல்லாத மனிதனின் வாழ்க்கையும்…!
அர்த்தம் இல்லாத வாழ்கை…!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version